வழக்கறிஞர் மதியழகனுடன் ஒர் உரையாடல்

கடந்த இரண்டாம் திகதி மார்ச் 2022, நானும் என் சக தோழி பவித்திராவும் வழக்கறிஞர் திரு மதியழகன் அவர்களை ஈப்போ, பேராக்கில் அவரது அலுவலகத்தில் கலந்து பேசிய உரையாடலை கீழே எழுதியுள்ளேன். இது ஒரு நேர்காணல் அல்ல. இங்கே, எங்களுக்காக நேரம் ஒதுக்கிய வழக்கறிஞருக்கும் இந்தச் சந்திப்பைத் தடங்கலின்றி ஏற்படுத்தி தந்த திருமதி அனித்தாவுக்கும் தகுந்த நன்றிகளைத் தெரிவிக்கும் வாய்ப்பிது.

வழக்கறிஞர் மதியழகன் பற்றிய சிறு முன்னுரை; இவர் 2008 தொடங்கி 2015 வரை நயணம் பத்திரிக்கைக்கு எழுதி வருகிறார். இவரின் தனிச்சிறப்பு இவரின் எழுத்து நவீன இலக்கியத்தில் சேருவதாகும். அதாவது மக்களை நோக்கி எழுதக் கூடிய எழுத்து. இவரது சாமானிய வார்த்தைகளும், அவ்வப்போது வரும் கேளிக்கைகளும் மக்களை அதிக ஈர்க்கச்செய்யும். தனது சொந்த அனுபவங்களையும் வழக்குகளையும் எழுதி வரும் இவர், சமூதாயத்தின் அடிப்படை பிரச்சனைகளான நிலம், கல்வி, குடும்ப சிக்கல்கள், வணிகம் போன்ற துறைகளில் நாம் அறிந்திருக்கவே முடியாத பொக்கிஷங்களை எழுதி தள்ளுகிறார். படிப்பது நமது விருப்பம்.

அவர் அலுவலகத்தில் எங்களை வரவேற்று, நாங்கள் மூன்றாம் வருட சட்டக் கல்லூரி மாணவிகள், ஞாயிறு ஓசையில் அவரின் எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறோம் என்று விசாரித்துத் தெரிந்துக் கொண்டார்.

நான் மிக எச்சரிக்கையாக ”சார், நீங்க 35 வருடமா இந்தப் பணில இருக்கீங்க, நான் ஏதாவது தெரியாம தப்பா சொல்லப்போனா என்னை மன்னிச்சிருங்கனு முன்ஜாமின் வாங்கிக்கிறேன்” என்றேன். அவர் சிரித்துவிட்டு, ”கேளுங்க” என்றார்.

முதலில் அவரிடம் கேட்டது, அவரது தொழில்துறையில் அவர் சந்திக்க நேர்ந்த, மூத்த வழக்கறிஞரான திரு சின்னையா அமிர்தலிங்கம் பற்றி மேலும் கூறுங்கள் என்றேன்.

            ”அவரின் தகப்பனார் தமிழ் பள்ளிகூடங்களின் அமைப்பாளர். அவருடன் உடன் பிறந்தோர் பதினைந்து பேர். இவர் மூத்தவர், அந்தக் காலத்தில் சட்டம் பயின்றவர். ஒரு சமயம் தனது கட்சிக்காரர் ஒர் உண்மையை இவரிடமிருந்து மறைத்துவிட்டர். அது தெரிந்ததும் இவர் எழுந்து தான் இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த போவதில்லை என்று நீதியிடம் கூறி வெளியேறினார். நான் அப்போது எதிர் வாத வக்கிலாக இருந்தேன். இப்பவும் அவர் செயத்து சரியா இல்லையா என யோசிப்பேன்.”

”இரண்டே விஷயம்தான். ஒன்று, தான் ஒரு நியாயமான வக்கிலாக, கட்சிக்காரர் தன்னிடம் பொய் கூறியதை கிஞ்சிற்றும் சகிக்கவே முடியாத நிலையான மனிதராக அப்படி செய்திருக்கலாம். இருப்பினும், இரண்டாவதாக, ஒரு வக்கிலாக தனது கடமை என்பது கட்சிக்காரரின் நோக்கத்தையும் ஆர்வத்தையும் நிறைவேற்றுவதே ஆகும். ஒரு வக்கில் இந்த இரண்டினையும் மனதில் கொண்டு அவர் எந்த பக்கம் போகிறார் என்பது அவர் அவர் விருப்பம். அவருக்கு அப்பவே அறுவது வயது”

            இரண்டாவதாக நான் கேட்டது ஜெலுத்தோங் புலியைப் (Late Karpal Singh) பற்றிதான். அவர் புன்னகைத்துவிட்டு ”அவரைப் பத்தி பேசிக்கிடே இருக்கலாமே” என்றார்.”மனிதர் மிகவும் ஜாலியானவர். அவருடன் சாப்பிட போனால், சாப்பிடுவதைவிட அதிகம் சிரிப்போம். நான் அவருடன் ஒரு வழக்குகாக நான்கு வருடம் பணியாற்றி உள்ளேன்”.

          "அவரைப் பொறுத்த மட்டும், அவரது சிந்தனையென்பது அவர் கட்சிகாரர் எப்படியாகினாலும் சரி, அவர்களின் வழக்குக்கான நோக்கத்தையும் தனது வாதத்தையும் நீதிபதியின் முன் நிறுவுகிறார். அதன்பின் நீதிபதி அதற்கான தீர்ப்பைச் சொல்கிறார்.”

நான் உடனே என் தர்க்கத்துடன் ”ஒருவேளை நம் கட்சிக்காரர் ஒரு வழக்கில் குற்றமற்றவர் என நிரூபிக்க நான்கில் இரண்டு கூறுகளை மட்டுமே இருந்து மற்ற இரண்டினை நிறைவு செய்வதாக அதாவது (Creating a Case) செய்யலாமா?” என்றேன். அதற்கு அவர்;

”நீ கேட்கும் கேள்வியே தவறு. உனது கட்சிக்காரைப் பொய் சொல்லச் சொல்கிறாய். இருப்பதை உள்ளபடியே நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும். அதற்கு முன்னாடி, இந்த வழக்கின் வெற்றி தோல்வி விழுக்காட்டினை முதலில் கட்சிக்காரரிடம் கூறி விட வேண்டும். ”

”மீண்டும் இரண்டே விஷயம்தான். நியாயமாக இருந்து நல்ல வக்கிலாகப் போகிறாயா இல்லை நன்கு சம்பாரித்து புகழ்பெற்ற வக்கிலாகப் போகிறாயா என்பதுதான். நீ முதலில் இதற்குதான் பதிலளிக்க வேண்டும். இதனால் தான் நான் criminal பக்கம் போவதில்லை சிவில் (civil) வழக்குடளுடன் நின்றுவிடுவேன்.”

அவர் வழக்கறிஞரான புதிதில், ஸ்கரின் (SKRINE) என்ற பெரிய அமைப்பில் வேலை செய்த அனுபவம் இருந்ததால், நான் அடுத்த கேள்வியாக, புது பட்டதாரிகள் இப்படியான பெரிய சட்ட நிறுவனங்களில் வேலையை ஆரம்பிப்பது ஆரோக்கியமானதா என்று கேட்டேன்.

“Skrine ஒரு பெரிய நிறுவனம் . அப்போதே அதில் 40 -50 வழக்கறிஞர்கள் வேலை செய்தனர். ஒவ்வொருத்தரும் ஒரு குறிபிட்ட வழக்குகளையே பார்பர். அங்கு வேலை செய்தால் அதிகம் கற்றுக்கொள்ள முடியாது. நம்மை தேடி வருபவருக்கு எப்படிபட்ட வழக்குவேண்டுமானலும் இருக்கலாம். அதனால் அனைத்து சட்டங்களையும் நாம் கரைத்துக் குடித்திருக்க வேண்டும் என்றில்லை. அனைத்திலும் அடிப்படையாவது தெரிந்திருக்க வேண்டும். SKRINE-இல் மூன்று வருடம் பணியாற்றிய பிறகு, நான் எனது சொந்த சட்ட அலுவகத்தைத் திறந்து விட்டேன்”

நான் இறுதியாக கேட்டது, இளைய சமூதமாகிய நாங்கள் முக்கியமாக சில ஆண்டுகளில் வழக்கறிஞராக ஆகயிருக்கும் நாங்கள் மலேசிய அரசியலில் அதி அவசியமாக என்னென்னலாம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றேன். அவர் சற்றும் யோசிக்காமல் ‘Fundamental Liberties’, அடிப்படை உரிமைகள் என்றார். எனக்கு ஆச்சரியம்தான். இந்தக் கேள்விக்கு ஒரு வேளை மலேசிய அமைப்பு, ம.இ.க, மலேசியாவின் முக்கிய அரசியல் புள்ளிகள், ஹின்றாப் என்றெல்லாம் கூறப் போகிறார் என்றுதான் நினைத்தேன்.

‘கண்டிப்பாக நமது அரசியலமைப்பு சட்டத்தில் வரும் அடிப்படை உரிமைகள் தான். நான் உன்மையை ஒப்புக் கொள்கிறேன், ஒரு சமயம் நான் வாகனத்தில் மிக வேகத்தில் பயணித்தேன். என்னைப் போக்குவரத்து காவலர்கள் நிறுத்திவிட்டனர். எனது ஆவணங்களை எடுத்தப்பின். என்னை விசாரித்த அதிகாரியின் சீருடையில் இருந்த எண்னை எழுதிக்கொண்டேன். இதை எதற்கு எழுதுறீர்கள் என அவர் கேட்க, நான் நாளை நீதிமன்றத்தில் தாங்கள் தான் வருவீர்கள் என எப்படி நம்புவது? அதற்காகத் தான் எழுதுகிறேன் எனப் பதிலளித்தேன். அவர் உடனே  நான் என்ன வேலை செய்கிறேன் எனக் கேட்டார். வழக்கறிஞர் என்றேன். சரி இந்த தடவை பரவாயில்லை என என்னை அனுப்பிவிட்டார் அந்த அதிகாரி.” என்று சொல்லி சிரித்தார்.

அதன் பின் முக்கியமாக, ”எங்க நீங்க படிச்சிருப்பீங்கல தமிழ் பள்ளியின் தலையெழுத்து. ‘Right to education’ வழக்கு. யாரெல்லாம் இருந்தாங்க சொல்லுங்க பார்ப்போம்”. நான் மிகத் தெளிவாக பிரதிவாதிக்குப் பதில், வாதிகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ”மிகச் சிறப்பாக வழக்கறிஞர் நற்குணவதி வாதாடினார்கள். நாங்கள் ‘adopt” செய்துக் கொண்டேம், சும்மா பெயருக்கு வாதாடி குட்டையைக் குழப்பக்கூடாது. இந்த வழக்கு கண்டிப்பாகக் கூட்டாச்சி நீதிமன்றத்தில் தான் முடியும்.”

பிழை சிறுகதையில் ஒரு வரி வரும். ‘சரித்திரம் உருவாகும் இடத்தில் ஒர் ஈ பறந்தால்கூட அதுவும் சரித்திரத்தின் அம்சம்தான் ’ இந்த வழக்கு பிறகு புத்திரஜெயாவில் மேல் முறையீட்டு நீதிமன்றத்திலோ அதன்பின் கூட்டாச்சி நீதிமன்றத்திலோ நடந்தால் நான் கண்டிப்பாக போவேன் என என் தோழியிடம் வீட்டுக்கு வந்தப்பின் சொல்லிக்கொண்டேன்.

 

முற்றும்.

 

பி.கு;

இங்கு வழக்கறிஞர் மதியழகன் கூறீனார் என்று குறிப்பிடபட்டிருக்கும் அனைத்தும் அவரது சாரம் ஆனால் என் எழுத்து. இப்படி சொல்லலாம், அதே சாரத்தை நான் பேசியிருந்தால், அப்படி தான் சொல்லியிருப்பேன். இந்த உரையாடல் நடந்து பல நாட்கள் ஆன பின் எழுதியதால், இதை சொல்ல வேண்டிய இடம் இருக்கிறது. நன்றிகள், எங்களை யார் என்றே தெரியாமல், அனுமதி தந்து வகுத்துக் கொண்ட அரைமணி நேரம், எங்களை அறியாமல் இரண்டரை மணி நேரம் நீடித்தது. அவர் முன் நாங்கள் இருவரும் தளிர். எங்களை மிக பணிவாக வணக்கம் கூறி சென்று வரச் சொன்னார்.

முக்கியமாக என் தோழி பவித்திராவின் தாயார் திருமதி அமுதா இல்லாமல் வழக்கறிஞர் அலுவலகம் சென்றிருக்க முடியாது, அவருக்கும் எனது வணக்கங்கள்.

Comments

Popular posts from this blog

OVERSIMPLIFIED CASE REVIEW: SURAINI KEMPE & ORS v. KERAJAAN MALAYSIA & ORS

OVERSIMPLIFIED CASE REVIEW: KETHEESWARAN KANAGARATNAM & ANOR v. PP [2021] 9 CLJ

IKIGAI, May 2025